உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பக்தி பஜனை நிகழ்ச்சி

புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பக்தி பஜனை நிகழ்ச்சி

புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி முன்னிட்டு பக்தி பஜனை நிகழ்ச்சி நடந்தது.


எல்லைப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் 52ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் துவங்கி நடந்து வருகிறது. 5ம் நாளான நேற்று காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை ஹயக்ரீவ ஹோமம், 10:30 மணி முதல் 12:30 மணி வரை மகா சுதர்சன ஹோமம் நடந்தது. மாலை சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை பிரிட்ஜ் அகடாமி குழுவினரின் பரதம் நாட்டியம், சுமதி சுந்தர் குழுவினரின் பக்தி பஜனை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !