சென்னை திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நாளை கருட சேவை
ADDED :8 hours ago
சென்னை: தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேசப் பெருமாள் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 11ல் தொடங்கியது. நான்காம் நாளான இன்று காலை கல்ப விருஷத்திலும், மாலை சர்வ பூபால வாகனத்திலும், சுவாமி அருள்பாலித்தார். இதில் ஏராளாமன பக்தர்கள் கலந்து கொண்டு தரினம் செய்தனர். நாளை காலை, பெருமாள் மோஹினி அவதாரத்திலும், மாலை கருட வாகனத்திலும் அருள்பாலிக்கிறார்.