உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் கனமழை : கோயிலை சுற்றி தேங்கிய மழைநீர்

ராமேஸ்வரத்தில் கனமழை : கோயிலை சுற்றி தேங்கிய மழைநீர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி மழைநீர் தேங்கி கிடந்தது.


வடகிழக்கு பருவ மழை சீசன் துவங்கியதால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, நேற்று காலை கனமழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருக்கோயில் உபகோயிலான லட்சுமண தீர்த்தம் கோயிலை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பக்தர்கள் பெரும் சிரமத்துடன் கடந்து சென்றனர். மேலும் தங்கச்சிமடம் விக்டோரியா நகரில் மழைநீர் தேங்கியதால், மக்கள் அவதிப்பட்டனர். ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் சுற்றி தேங்கிய மழைநீரை ஊழியர்கள் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !