நவராத்திரி ஆறாம் நாள், சஷ்டி விரதம்: சண்டிகா தேவியை வழிபட கவலை தீரும்!
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் நாளில் அம்பிகை:யை சர்ப்ப ஆசனத்தில் வீற்றிருக்கும் சண்டிகா தேவியாக அலங்கரிக்க வேண்டும். கடலை மாவு கோலம் இட்டு, தேங்காய் சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல் படைத்து செம்பருத்தி, சம்பங்கி சாற்றி அம்பாளை வழிபட வேண்டும்.
நவராத்திரியின் ஆறாம் நாளில் சண்டிகா தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இவள் தீமை செய்யும் அரக்கர்களை அழிப்பதற்காக பார்வதி தேவி எடுத்த அவதாரமாகும். சண்டிகா தேவியை இந்த நாளில் மனமுருகி வழிபட்டால் மனக்கவலைகள் தீரும் மற்றும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சஷ்டி விரத தினமான இன்று கந்தசஷ்டி கவசம் மற்றும் முருகனின் மந்திரங்களான "ஓம் சரவணபவ", "ஓம் சரவணபவாய நம" ஆகியவற்றைச் சொல்லலாம் அல்லது கேட்கலாம். முருகப்பெருமானுடன் இருக்கும் அம்பாளை வழிபட எதிலும் வெற்றி கிடைக்கும். இன்று கொலுவில் வீற்றிருக்கும் சண்டிகா தேவியை வழிபடுவோம்.. குடும்ப அமைதி, வளம் பெறுவோம்!