முத்துமாரியம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
ADDED :4 days ago
வால்பாறை: வால்பாறை, அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் வரும் டிசம்பர், 14ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. இந்நிலையில் கோவிலில் முகப்பு வாயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது.
விழாவையொட்டி காலை, 9:00 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து கோவில் தர்மகர்த்தா பொன்னுசாமி தலைமையில் பக்தர்கள் கொடிமரத்தை பிரதிஷ்டை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராஜா, செயலாளர் ஜெகன்னாதன், பொருளாளர் தமிழ்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.