ஐப்பசி ராசி பலன்: தனுசு .. நினைத்ததை சாதிப்பதில் உறுதியான நீங்கள் தவறான நட்பை விட்டு விலகுவது நல்லது!
தனுசு .. மூலம்: ஒவ்வொரு படிப்பினைகளையும் அனுபவமாக ஏற்று வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் கேது, சகாய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும். குடும்பம் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் போராட்டங்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். கடந்த மாதம்வரை போராட்டங்களை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த மாதம் அவற்றிலிருந்து மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். சுயதொழில் நடத்தி வருபவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். சிலரால் சொந்த இடம் வீடு என்று வாங்க முடியும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். மனதில் நிம்மதி உண்டாகும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் புதிய பொறுப்பு பதவி என்ற ஆசையும் நிறைவேறும். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவது நன்மையளிக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 31, நவ. 1.
அதிர்ஷ்ட நாள்: அக். 21, 25, 30. நவ. 3, 7, 12, 16.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை உண்டாகும்.
பூராடம்: நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் வக்கிரமாகவும், உங்கள் ஜீவனாதிபதி புதன் மாதத்தின் முற்பகுதியில் வக்கிரமாகவும், பிற்பகுதியில் நேர்கதியிலும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பம் தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். இழுபறியாக இருந்த பணம் வரும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொந்த இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழக்கூடிய நிலை உருவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளுக்காக எடுக்கிற முயற்சிகள் வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கடந்த மாதம் வரை இருந்த நெருக்கடிகள் இந்த மாதம் இல்லாமல் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தடைபட்டிருந்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் நிம்மதி உண்டாகும். புதிய வியாபாரம் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகள் விளைச்சலில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனைகளை ஏற்பது நன்மையளிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ. 2.
அதிர்ஷ்ட நாள்: அக். 21, 24, 30. நவ. 3, 6, 12, 15.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.
உத்திராடம் 1 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் உறுதியானவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உங்கள் வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் லாபம் தரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். அக். 20 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் நிலையை மாற்றும். செல்வாக்கை உயர்த்தும். வசதி வாய்ப்புகளை அதிகரிக்கும். போராட்டம் பிரச்னை என்றிருந்த நிலையெல்லாம் மாறும். சிலருக்கு சொந்த இடம், வீடு என்ற கனவு நனவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் இல்லாமல் போகும். ஆரோக்கியம் மேம்படும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த சகோதரர்கள் தங்கள் கோபத்தை மறந்து ஒன்றாவீர்கள். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள் என்றாலும், நவ. 13 முதல் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போவதால் அனைத்திலும் நிதானம் காப்பது நன்மையளிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துப்போவது அவசியம். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். வார்த்தைகளில் கோபத்தைக் காட்டாமல் இருப்பது அவசியம். பெண்கள் கணவரின் நலனில் அக்கறை எடுப்பது அவசியம். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: நவ. 3.
அதிர்ஷ்ட நாள்: அக். 19, 21, 28. நவ. 1, 10, 12.
பரிகாரம்: வடாரண்யேசுவரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் ஏற்படும்.