பாறையில் சாதம், சாம்பார் மழையுடன் அன்னதானம்: சூலப்புரத்தில் வினோத வழிபாடு
ADDED :2 days ago
எழுமலை: மழைப்பொழிவு வேண்டி எழுமலை பகுதி கிராம பாறைகளில் கூழ் ஊற்றி குடிப்பது, சாதம் சாப்பிடுவது என மக்கள் ஒவ்வொரு வித வழிபாடு மேற்கொள்கின்றனர். கூழ், சாதத்தை மழை பெய்து கழுவிவிடும் என்ற ஐதீகம் இப்பகுதி மக்களிடையே உள்ளது.
சூலப்புரம் அருகே சிறிய மலைகரட்டில் பெருமாள் கோயில் விளக்குத்துாண் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வழிபாடு நடக்கும். நேற்று விளக்குத்துாணில் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்களுக்கு வாழை இலை போடாமல் பாறையில் அன்னதானம் நடந்தது. பாறையில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு என பரிமாறினர். பக்தர்கள் சாப்பிட துவங்கியதில் இருந்து மழை பெய்தது. புரட்டாசி 3வது சனிக்கிழமையில் நடந்த வழிபாட்டின்போதும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.