உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் தெப்பல்

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் தெப்பல்

சின்னசேலம்: சின்னசேலம் கடைவீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நவராத்திரி விழாவையொட்டி, தெப்பல் உற்சவம் நடந்தது.

அதனையொட்டி, காலை சுவாமிக்கு 17 வகையான அபிஷேக, அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார், உற்சவர் தங்க தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.

ஆர்ய வைசிய பெண்கள் மாவிளக்கு போட்டு அம்மனை வழிபட்டனர். இரவு கோவில் நடுவில் தண்ணீர் நிரப்பி தெப்பல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !