உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை: கலைவாணியை வழிபடுவோம்.. கல்வி, தொழிலில் வளம் பெறுவோம்!

இன்று சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை: கலைவாணியை வழிபடுவோம்.. கல்வி, தொழிலில் வளம் பெறுவோம்!

நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று வழிபட வேண்டும். பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி வெள்ளைத் தாமரையில் சத்திய லோகத்தில் வாசம் செய்கிறாள். இன்று வீட்டில்  சரஸ்வதி படத்தை பூக்களால் அலங்கரித்து  விளக்கேற்றி பொரி, சுண்டல், பழம், பாயாச வகைகளைப் படைத்து வழிபட வேண்டும். மாணவர்கள் தங்கள் புத்தகம், எழுதுபொருட்களை கலைமகளாகக் கருதி சந்தனம், குங்குமமிட்டும், தொழிலாளர்கள் தங்களின் கருவி, ஆயுதங்களை சுத்தம் செய்து அலங்கரித்து பூஜை செய்து வழிபட வேண்டும். 


சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும்.  படத்தின் முன் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.


நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள் பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.


வீட்டில் சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 9:00 – 10:00 மணி. அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நல்வாழ்த்துகள்..!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !