பங்காரு அடிகளார் 3ம் ஆண்டு குருபூஜை இன்று தொடக்கம்
மேல்மருவத்துார்: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின் மூன்றாம் ஆண்டு குருபூஜை விழா, நேற்று தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபரா சக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின் மூன்றாம் ஆண்டு குருபூஜை விழா, நேற்று அதிகாலை தொடங்கியது. ஆதிபராசக்தி அம்மன் மற்றும் பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. மாலை4:00 மணிக்கு, உலக நன்மைக்காக, கலச விளக்கு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் நாள் விழாவான இன்று, அதிகாலை 5:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மன் மற்றும் பங்காரு அடிகளார் உருவசிலைக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி அபிஷேகம், நடத்தி வைக்கின்றார்.
இதில், ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பர். முன்னதாக, சித்தர் பீடத்திற்கு வருகை தரும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காருஅ டிகளாருக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு, தங்க தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கு, தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்து, ஆயிரக்கணக்கான செவ்வவாடை பக்தர்கள், பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ஆகியமாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.