உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி மலையில் தயாராகும் பஞ்சலோக அம்பாள் விக்ரகங்கள்: குன்றத்தில் பிரதிஷ்டைக்கு உருவாகிறது

சுவாமி மலையில் தயாராகும் பஞ்சலோக அம்பாள் விக்ரகங்கள்: குன்றத்தில் பிரதிஷ்டைக்கு உருவாகிறது

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி கிரிவலப்பாதை போஸ்ட் ஆபீஸ் அருகே அதிசய காமாட்சி, பஞ்சமுக வராஹி அம்பாள் தியான மையம் புதிதாக அமைக்கப்படுகிறது. அங்கு பிரதிஷ்டை செய்வதற்காக பஞ்சலோகத்தால் 2 அடி உயர பஞ்சமுக வராஹி, 2 அடி உயர அதிசய காமாட்சி விக்ரகங்கள் சுவாமி மலையில் தயாராகிறது.

குன்றத்து தியான மையத்தில் அக். 25ல் அதிசய காமாட்சி அம்பாள், பஞ்சமுகி வராஹி அம்பாள் விக்ரகங்கள் பிரதிஷ்டை விழா நடக்கிறது. அன்று காலை காமாட்சி சுப்ரபாத சேவை, விக்னேஸ்வர பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயண ஹோமம், மூலமந்திர ஹோமங்கள் நடக்கிறது. காலை 11:35 மணிக்கு அதிசய காமாட்சி அம்பாள், பஞ்சமுக வராகி அம்பாள் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடக்கிறது. அஷ்டவராகி அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !