ஆயுதபூஜையொட்டி மருதமலையில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயுதபூஜையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் ஏழாம் படைவீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், நவராத்திரி விழாவையொட்டி, அக்., 11ம் தேதி, விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அடங்கிய கொலு, திருக்கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டது. நாள்தோறும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது. ஆயுத பூஜை விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால், நேற்று ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். விஜயதசமியான இன்று, பகல், 12:00 மணிக்கு, அம்பு சேர்வை நிகழ்ச்சி நடக்கிறது.