உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெங்களூரு வாழும் கலை மையத்தில் சண்டி மஹா யாகம்

பெங்களூரு வாழும் கலை மையத்தில் சண்டி மஹா யாகம்

பெங்களூரு: நவராத்திரி விழாவை முன்னிட்டு, வாழும் கலை சர்வதேச மையத்தில், பரமபூஜ்ய  ரவிசங்கர் குருஜி முன்னிலையில், சண்டி மஹா யாகம் நடந்தது.


பெங்களூரு கனகபுரா சாலையில் உள்ள, வாழும் கலை சர்வதேச மையத்தில், கடந்த 10ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. இங்குள்ள தியான மண்டபத்தில் தினமும் பூஜைகள் நடந்தன. கடந்த 16 ம் தேதி மைய நிறுவனர் பரமபூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி முன்னிலையில், மஹா கணபதி ஹோமம், ஸ்ரீசுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீநவகிரக ஹோமம், ஸ்ரீமஹா சுதர்சன ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீசத சண்டி மஹா யாகத்துடன் நிறைவு பெற்றது.


யாக பூஜைகளை ஸ்ரீஸ்ரீகுருகுலம் பாட சாலை முதல்வர் சிவா கம விசாரதா சிவஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் முன்நின்று நடத்தினார். இதில் 500க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டு லட்சத்திற்கு மேலான பக்தர்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மஹா யாக பூஜைகளை தரிசனம் செய்து, ரவிசங்கர் குருஜியின் ஆசி பெற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !