உலக நன்மைக்காக உபதலையில் சிறப்பு யாகங்கள்: பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை
குன்னூர்: குன்னூர் உபதலை சாய் நிவாஸில் உலக அமைதி மற்றும் உலக நன்மை வேண்டி நவராத்திரி சிறப்பு யாகங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆனந்த குரு மேக்நாத் சாய் மற்றும் சாய் மாதா யசோதம்மா ஆகியோர் முன்னிலையில நடந்த இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஆண்டு முழுவதும் தினமும் தொடர்ந்து கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் தன்வந்திரி ஹோமங்கள் நடந்து வரும் நிலையில், நவராத்திரி விழாவையொட்டி, 9 நாட்கள் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. மகா கணபதி, ஷைலபுத்ரி, துர்கா, பிரம்மச்சாரிணி, பால திரிபுர சுந்தரி, ஆயுஷ்ய, சந்திரகாண்டா , லக்ஷ்மி நரசிம்மர், அன்னபூர்ணா, குஷ்மண்டா, மகாலக்ஷ்மி, லலிதா சஹஸ்ரநாமம், ஸ்கந்த மாதா, சந்தன கோபால, பார்வதி சுயம்வரம், காத்யாயினி, நவக்கிரக, விஸ்வவசு கந்தர்வ ராஜ, காலராத்ரி ஹோமம், சரஸ்வதி, மேதா, மஹாகௌரி, சித்தி தாத்ரி, ருத்ரம் ஹோமம், மஹா மிருத்யுஞ்ஜய, மகா சண்டி ஹோமங்கள் நடந்தன. மகளிரின் சிறப்பு பஜனைகள், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் சிறப்பு கொலு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தன. இதில் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பங்கேற்றனர்.