உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட்டம்

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், நவராத்திரி விழாவையொட்டி கடந்த ஒரு வார காலமாக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன; விழாவையொட்டி கோவில்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனால், கடந்த ஒரு வார காலமாக பொள்ளாச்சி பகுதியே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்றுமுன்தினமே சத்திரம் வீதி மற்றும் கடை வீதிகளில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கினர். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

நேற்று கடைகளில் பொருட்களை சுத்தம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, புதிய பூக்களை போட்டு வழிபாடு செய்தனர்.

பள்ளி மாணவர்களது பாடப்புத்தகங்கள், சுவாமி அறையில் வைத்து பூஜை செய்து, சுண்டல் உள்ளிட்டவை படையலிட்டு வழிபாடு செய்தனர். மேலும், ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து, இன்று கோவில்கள் மற்றும் பள்ளிகளில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சியோடு மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், சமதர்மபுரம் முத்துமாரியம்மன் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமிகளை தரிசித்து சென்றனர்.

பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் சரஸ்வதி, மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பங்கேறு சுவாமி தரிசனம் செய்தனர். பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள்பள்ளி மாணவர்கள், மாணவிகள் பங்கேற்று தரிசனம் செய்தனர். வணிக நிறுவனங்கள், வீடுகளில் பொரி, கடலை, சுண்டல் வைத்தும், புத்தகம், நோட்டுகளை வைத்தும் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !