உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹிந்துக்களின் நம்பிக்கைகளை அமைச்சர்கள் சீர்குலைக்கக்கூடாது விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்

ஹிந்துக்களின் நம்பிக்கைகளை அமைச்சர்கள் சீர்குலைக்கக்கூடாது விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்

பழநி: அமைச்சர்கள் கோவிலுக்கு செல்லும்போது, ஹிந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்காதபடி நடந்து கொள்ள வேண்டும் என, முதல்வர் விஜய் அறிவுறுத்த வேண்டும், என, விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளார்.

அந்த அமைப்பின், திருக்கோவில், திருமடங்கள் பாதுகாப்புப் பிரிவின் தமிழக அமைப்பாளர் செந்தில்குமார், கடந்த 2023ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடந்திருந்தார். பழநி முருகன் கோவிலுக்கு சென்ற பிற மதத்தினர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிய வழக்கில், 2024 ஜனவரி 30ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ‘கோவில்களில் ஹிந்து அல்லாதவர், கொடிமரம் தாண்டி வரக்கூடாது. ‘ஹிந்து இறைவன் மீது நம்பிக்கை உண்டு’ என, உறுதிமொழி பத்திரம் அளித்து, கோவில் நிர்வாகம் அதை பதிவு செய்த பின், பிற மதத்தவரை அனுமதிக்கலாம் என, அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், செந்தில்குமார் பழனியில் நேற்று அளித்த பேட்டி:

ஹிந்து மதத்தவர் அல்லாதவர்கள், பிற மதத்தின் அடையாள சின்னத்தை அணிந்து கொண்டு, அமைச்சர்களுடன் மதுரை, திருவண்ணாமலை கோவில்களுக்குள் செல்கின்றனர். இது மிகவும் கண்டனத்திற்கு உரியது. இந்த செயல்கள், ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதித்து, அவர்களின் மனதை புண்படுத்துகிறது. எனவே, ஹிந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்காதபடி நடந்து கொள்ள வேண்டும் என, அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !