உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் நவராத்திரி விழா: கத்தி போட்டு அம்மன் அழைப்பு

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் நவராத்திரி விழா: கத்தி போட்டு அம்மன் அழைப்பு

நெகமம்: நெகமம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிகழ்ச்சி இன்று நடந்தது.


நெகமம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிகழ்ச்சிகள் கடந்த, 11ம் தேதி, கணபதி ஹோமம் அழகு சேர்வை செய்து சக்தி அழைத்து கொலு வைக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 16ம் தேதி, திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. 19ம் தேதி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நடந்தது. 20ம் தேதி, அலகு செய்து சக்தி அழைத்தல் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று கத்தி போட்டு அம்மனை அழைத்தனர். பெண்கள் அம்மனை வேண்டி முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து மாவிளக்கு பூஜை, ராகு தீப பூஜை, அம்பு சேர்வை, அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 22ம் தேதியன்று, காலை 9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !