மகரநோன்பு அம்பு விடுதல் விழா
ADDED :16 hours ago
விருதுநகர்: விருதுநகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமிகள் அம்பு எய்தும் மகர நோன்பு விழா நடந்தது. இதில் புலி வேடமிட்டு ஊர்வலமாக பக்தர்கள் வந்து சுவாமிக்கு வழிபாடு செய்தனர்.
விருதுநகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு விஜயதசமியான நேற்று மீனாட்சி சொக்கநாதர் சுவாமி, சந்திரசேகரராக அவதாரம் எடுத்து மக்களின் நலன் காக்க அரக்கனை அழிக்க அம்பு ஏய்தல் நிகழ்வு கே.வி.எஸ்., பள்ளி எதிரே நடந்தது. இதற்காக தங்க முலாம் பூசப்பட்ட தேரில் சொக்கநாதர், சந்திரசேகரராக எழுந்தருளினார். அதன் பின் அம்பு எய்தல் நடந்தது.
மாலையில் வெயிலுகந்தம்மன், வாலசுப்பிரமணியசுவாமி ரெங்கநாத சுவாமி வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலமாக வந்து கே.வி.எஸ்., பள்ளி அருகே ஹிந்து நாடார் தேவஸ்தான நந்தவனத்தில் ஒன்று கூடி அரக்கனை வதம் செய்தல் நடந்தது. தொடர்ந்து புலிவேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் நடந்தது.