ஆசை இல்லாதவனுக்கு எல்லாம் சுகமே: சிவானந்தர்
* கடந்ததை மறந்திடு. வாழ்வை புதிதாக தொடங்கு. இனி எல்லாம் சுகமாகும்.
* தர்ம பாதையில் நடந்தால் அதுவே உனக்கு காவலாக நிற்கும்.
* அனைத்து சூழ்நிலைகளையும் மாற்றும் சக்தி காலத்திற்கு உள்ளது.
* குடும்பத்தினருக்கு உதவினால் அது கடவுளுக்கே செய்தது போலாகும்.
* குற்றமுள்ள மனம் எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கும்.
* நேர்மையற்ற வழியில் வரும் வெற்றியை விட நேர்மையால் பெற்ற தோல்வி சிறந்தது.
* வருமானத்திற்குள் குடும்பத்தை நடத்து. நிம்மதியாக வாழ்வாய்.
* மனம் ஒரு மந்திரச்சாவி. அதை பயன்படுத்துவதை பொறுத்து எதிர்காலம் அமையும்.
* செல்வமும், அந்தஸ்தும் ஒருபோதும் சந்தோஷத்தை தருவதில்லை.
* ஆசை இல்லாதவனே மிகப் பெரிய பணக்காரன்.
* குழந்தை போல் திறந்த மனதுடன் எளிமையாக வாழ்.
* கடவுள்தான் உண்மை. உண்மைதான் கடவுள்.
* உலகம் ஒரு கண்ணாடி. நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும்.
* நல்ல எண்ணங்களால் உன் மனதை நிரப்பு.