உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி வழிபாடு

விழுப்புரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி வழிபாடு

விழுப்புரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி நிறைவு நாள் வழிபாடு நடந்தது.


விழுப்புரம் அருகே கோலியனுாரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், நவராத்திரி விழா கடந்த 10ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. நேற்று நிறைவு நாள் வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு, முப்பெரும் தேவியர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் பெருமாளுக்கும் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமிகளுக்கு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !