திருப்பரங்குன்றம் கோயிலில் அம்பாளுக்கு மகா அபிஷேகம்: சகஸ்ரநாம அர்ச்சனை
ADDED :1 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வராகி அம்மன் கோயிலில் அக். 11ல் துவங்கிய சாரதா நவராத்திரி மஹோத்ஸவத்தில் லலிதா பரமேஸ்வரி அம்பாள் சைல புத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாந்தா, புவனேஸ்வரி, ஸ்கந்த மாதா, காத்யாயினி, மகா கவுரி அலங்காரங்களில் அருள் பாலித்தார். விழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று அம்பாளுக்கு மகா அபிஷேகம் முடிந்து சந்தன காப்பு அலங்காரமானது. தொடர்ந்து ஊஞ்சல் சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை, கன்னியா பூஜை தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.