கோவையில் நவராத்திரி மஹோற்சவம் நிறைவு: துர்கா சிலைகள் குளங்களில் விசர்ஜனம்
ADDED :17 hours ago
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் எஸ்.என்.வி.திருமண மண்டபத்தில் பத்து நாட்களாக நடந்தது. பிரம்மாண்ட துர்கா தேவி சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று, பெங்காளி மக்கள் துர்காதேவி மற்றும் காளி சிலைகளை அலங்கரித்த வாகனத்தில் ஊர்வலமாக நகர வீதிகளில், மேளதாளங்கள் முழங்க எடுத்து சென்றனர். மாலை அணிவித்து வழிபட்ட பின் முத்தண்ணன் குளத்தில் கரைத்தனர். ஹோப் காலேஜ் மணிமஹாலில், பெங்காளி சமாஜ் சார்பில் நடந்து வந்த ஸ்ரீஸ்ரீ துர்கா பூஜா மஹோற்சவ நிறைவு நாளான நேற்று, துர்கா சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பின் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, சிங்காநல்லுார் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது.