உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் சாமி தரிசனம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் சாமி தரிசனம்

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் திருமண நாளை முன்னிட்டு மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.


தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், தனது திருமண நாளை முன்னிட்டு மனைவியுடன் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசுவும் வந்திருந்தார். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர் ஆனந்த் மூலவர் அங்காளம்மன், உற்சவர் அங்காளம்மனை தரிசனம் செய்தார். பின்னர், கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அமைச்சர்கள் இருவருக்கும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !