உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லவர் கால கொற்றவை சிற்பம் திண்டிவனம் அருகே கண்டெடுப்பு

பல்லவர் கால கொற்றவை சிற்பம் திண்டிவனம் அருகே கண்டெடுப்பு

விழுப்புரம்: திண்டிவனம் அருகே, பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.


திண்டிவனம் அருகே, கீழ்அருங்குணம் கிராம ஏரியில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், ‘‘கீழ்அருங்குணம் ஏரிக்குள், மண்ணில் கிடத்தப்பட்ட நிலையில், கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. ஆறு அடி உயரமுள்ள பலகை கல்லில் இந்தச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, 8 கரங்களுடன் காணப்படும் கொற்றவை இதில், 4 கரங்களுடன் காட்சியளிக்கிறார். வாகனமான மான், அவரது பின்னால் நீண்ட கொம்புகளுடன் நிற்கிறது. பல்லவர் காலத்தை சேர்ந்த இச்சிற்பம், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !