கிணத்துக்கடவு காரணப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா
கிணத்துக்கடவு: பட்டணம், காரணப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
கிணத்துக்கடவு, பட்டணம் கிராமத்தில் உள்ள சீதாராமச்சந்திர சீதேவி பூதேவி சமேத ஸ்ரீ காரண பெருமாள் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, 24 தேதியன்று ஆரம்பம் ஆனது. இதில், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், கண் திறப்பு, கோபுர கலசம் வைத்தல் மற்றும் பிரசாதம் வழங்குதல், தீர்த்தம் எடுத்தல், முளைப்பாரி கொண்டு வருதல், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று, 25 ம் தேதி, மங்கள இசை, இரண்டாம் கால யாக பூஜை, கலசம் புறப்பாடு, கோபுர விமான மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம், திருக்கல்யாணம் பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.