உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் அரச மரத்தில் திடீரென சுரந்த பால்: கற்பூரம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்

கோயில் அரச மரத்தில் திடீரென சுரந்த பால்: கற்பூரம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே கோயில் வளாகத்தில் உள்ள அரச மரத்தில் திடீர் என பால் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


பெரியநாயக்கன்பாளையம் சாமி செட்டிபாளையம் அருகே சாரங்கா நகர் பகுதியில் பால விநாயகர், பாலமுருகன் கோயில்கள் உள்ளன. பழமையான இக்கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் வளாகத்தில் விநாயகர் மற்றும் முருகனின் வலது, இடது பக்கங்களில் பழமையான அரச மரங்கள் உள்ளன. நேற்று ஐப்பசி பவுர்ணமி சிறப்பு பூஜைகள் மாலையில் நடந்தன. அப்போது அரச மரத்தில் இருந்து திடீரென பால் சுரக்க ஆரம்பித்து, படிப்படியாக கொட்டியது. இதையடுத்து அப்பகுதியில் குவிந்திருந்த பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் அரச மரத்துக்கு கற்பூரம் ஏற்றி, தீபாதாரணை காட்டி வழிபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !