உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை மாத பூஜைக்காக நவ 16-ல் நடை திறப்பு : நாளை முதல் முன்பதிவு செய்யலாம்

கார்த்திகை மாத பூஜைக்காக நவ 16-ல் நடை திறப்பு : நாளை முதல் முன்பதிவு செய்யலாம்

சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி திறக்கப்படுகிறது. 


கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பனின் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் எட்டுத்திக்கும் ஒலிக்கும். இந்த ஆண்டு சபரிமலை மண்டல கால பூஜை வரும் நவ., 16ம் தேதி துவங்க உள்ளது. அன்று நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் துவங்குகிறது. இதனை முன்னிட்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் கேரளா அரசு, தேவஸ்வம் போர்டு இணைந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. 


ஆன்லைன் முன்பதிவு: சபரிமலையில் மண்டல, மகர விளக்கு காலத்தில், சுவாமி தரிசனத்துக்கு "ஆன்லைன் முன்பதிவு, செய்வது அவசியம். சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிரிக்கும் போது, சுவாமியை தரிசிக்க, 10 மணி நேரம் வரை, வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதனால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க, ஆன் லைன் முன்பதிவு கட்டாயமாகிறது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் பெறுகின்றனர். அதன்படி மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான sabarimalaonline.org மூலம் தங்களின் தரிசனத்திற்கான தேதியையும் நேரத்தையும் முன்கூட்டியே நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !