உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

திண்டிவனம்: விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை 5:00 மணியளவில் விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை அபிேஷகம் மற்றும் பூஜிக்கப்பட்ட, 108 சங்குகள் மற்றும் கலசங்கள் கோவில் உட்பிரகாரம் வலம் வந்த பின்னர், கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம், வலம் வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !