உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வரர் கோவிலில் இன்று மகா சண்டி ஹோமம்

சனீஸ்வரர் கோவிலில் இன்று மகா சண்டி ஹோமம்

புதுச்சேரி: மொரட்டாண்டி மகா சனீஸ்வரர் கோவிலில் இன்று மகா சண்டி ஹோமம் மற்றும் 108 சுவாசினி பூஜை நடக்கிறது.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் பிரசித்திப்பெற்ற 27 அடி உயர விஸ்வருப மகா சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று மதியம் 12:00 மணிக்கு மகா சண்டி ஹோமம் மற்றும் 108 சுவாசினி பூஜை நடக்கிறது. இதையொட்டி, நேற்று மாலை மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம் சப்தஸ்ரீ பாராயணம் நடந்தது.

இன்று காலை கோபூஜை, மதியம் 12:00 மணிக்கு 108 சுவாசினி பூஜை, மகா சண்டி ஹோமம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !