திருக்கோஷ்டியூர் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :20 hours ago
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் அருகே தி.வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலவர் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி ஸ்ரீமூலபால கால பைரவர் என்றழைக்கப்படுகிறார். யுத்தம் துவங்கும் முன் சோழ மன்னர்களால் வழிப்பட்ட தலமாகும். இங்கு தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி துவக்கத்தை முன்னிட்டு நேற்று இரவு மூலவர் மூலபாலகால பைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளினார். பைரவர் சன்னதி முன்பாக மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து சிவாச்சார்யர்களால் மகா பைரவயாகம், கோ பூஜை , லட்சார்ச்சனை நடந்தது.