/
கோயில்கள் செய்திகள் / குஜராத் ராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் தரிசனம்
குஜராத் ராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் தரிசனம்
ADDED :52 minutes ago
குஜராத் மாநிலம் கேடா மாவட்டம் மாதர் பகுதியில் உள்ள சங்கராச்சாரியார் நகரில் அமைந்துள்ள கைலாஷ் தாம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி மாதா கோயிலுக்கு, காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று நவம்பர் 2-ம் தேதி விஜயம் செய்தார். துவாரகா சங்கராச்சாரியார் மடத்தின் கிளையாகச் செயல்படும் இத்தலத்தில், சுவாமிகளுக்கு பக்தர்கள் மற்றும் மடத்தின் நிர்வாகிகள் இணைந்து பாதபூஜை செய்து வழிபட்டனர்.