உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எட்டுக்குடி முருகன் கோவிலில் முதல்வர் ரெங்கசாமி தரிசனம்

எட்டுக்குடி முருகன் கோவிலில் முதல்வர் ரெங்கசாமி தரிசனம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் எட்டுக்குடி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.


நாகை மாவட்டம் எட்டுக்குடி, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று வருகை தந்த புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி, மனதுருக சுவாமி தரிசனம் செய்தார். கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.


பின் முதல்வர் ரெங்கசாமி கூறியதாவது, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தொழிற்சாலைகள், பல்வேறு தொழில் நிறுவனங்களை உருவாக்கும் முயற்சிகளில் புதுச்சேரி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலவும் பிரச்னைகளை களைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் ரெங்கசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !