உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 1,500 பக்தர்கள் உழவார பணி

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 1,500 பக்தர்கள் உழவார பணி

திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 15ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில் பஞ்ச மூர்த்திகள், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண் டிகேஸ்வரர், ஆகியோர் தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். 24ல், மஹா தீபம் ஏற்றப்படும். விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலிற்கு வருகை தருவர். இந்நிலையில், கோவில் வளாகம் துாய்மைப்படுத்தும் பணியில், தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷனை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் உழவார பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !