உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தோஷம் வேணுமா கடவுளை சரணடை: ஆதிசங்கரர்

சந்தோஷம் வேணுமா கடவுளை சரணடை: ஆதிசங்கரர்

* உண்மையான சந்தோஷம் பெற கடவுளைச் சரணடைவதே வழி.  
* தர்மம் செய்வதன் மூலம் மனம் துாய்மையாகும்.
* கடவுளிடம் உன் மனதை கொடுப்பதே உயர்ந்த செயல்.
* சுயநலம் இல்லாமல் பிறருக்கு உதவி செய்வதே கடவுளை அடையும் வழி.
* ‘மூச்சுள்ள வரை உன்னை நினைக்க வேண்டும்’ என்பதே கடவுளிடம் கேட்க வேண்டிய வரம்.
* தியானத்திற்கு நேரம், இடம் தடையாக இருக்க கூடாது.
* ஒளியில்லாமல் எதையும் பார்க்க முடியாது; ஆராய்ச்சியின்றி ஞானம் தோன்றாது.
* நெருப்பில்லாமல் சமையல் இல்லை; ஞானம் இல்லாமல் மோட்சம் இல்லை.
* ஐம்புலன்களை கட்டுப்படுத்தினால் மனமும் கட்டுப்படும்.
* ‘நான்’, ’எனது’ என்ற எண்ணமே, துன்பத்திற்கு காரணம்.
* பயனில்லாத வார்த்தை பேசாதே.
* சந்தர்ப்பம் கிடைத்தும் நல்ல வார்த்தைகளை பேசாதவன் பயனற்றவன்.
* பிறரின் போற்றுதலையும், துாற்றுதலையும் பொருட்படுத்தாதே.
* தெரிந்தும் கெட்டதை செய்வதும், நல்லதை கேட்காததும் வீண் செயல்கள்.
* ஒரு விளக்கு மற்றொரு விளக்கின் ஒளியை தேடாது. அதுபோல பிறர் உதவியை எதிர்பார்க்காதே.
* வறுமையும், செல்வமும் விருந்தினர் போல தற்காலிகமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !