தினமும் கோயிலுக்கு செல்: காஞ்சி மஹாபெரியவர்
* ஹிந்து மதத்தின் ஆணிவேராகத் திகழும் கோயில்களுக்கு தினமும் செல்.
* குடும்பக் கடமையை விட்டு விட்டு சமூக சேவையில் ஈடுபடாதே.
* உன் ஊரிலுள்ள சிறிய கோயில்களுக்கு முடிந்ததை செய்.
* மந்திரங்களை உச்சரிக்காமல் இருந்தால் மந்திரங்களுக்கு நஷ்டம் இல்லை, நமக்குத் தான் நஷ்டம்.
* எளிமையை பின்பற்றினால் பொருளுக்காக அலைய வேண்டியதில்லை.
* சிறிய செயலாக இருந்தாலும் அதை அக்கறையுடன் செய்.
* ‘பிறரை விட நமக்கு அதிகம் கிடைக்க வேண்டும்’ என நினைக்காதே.
* குழந்தையின் மனதில் பக்தியை விதைத்திடு. அது என்றாவது முளைக்கும்.
* இம்மைக்கும், மறுமைக்கும் தேவையான செயல்களைச் செய்.
* தர்மமே உன் வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும்.
* ஒவ்வொருவர் மனதிலும் கடவுள் குடி கொண்டிருக்கிறார்.
* எப்போதும் கடவுளின் திருநாமத்தை சொல். நிம்மதியாக வாழலாம்.
* பேச்சில் கட்டுப்பாடு இல்லையேல் பிரச்னை உருவாகும்.
* அறிவு, அழகு, பணம் இவற்றில் எது இருந்தாலும் அதை எண்ணி கர்வப்படாதே.
* எந்த ஒரு இக்கட்டான சூழலிலும், செய்த தர்மம் உன்னை காப்பாற்றும்.
* எதுவும் நம் கையில் இல்லை. கடவுளிடம் பொறுப்பை ஒப்படைத்திடு.