போடி பரமசிவன் கோயிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றம்
போடி: தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் மலைக்கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா செயல் அலுவலர் சுபிதா தலைமையில் நடந்தது. பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலைய ராஜபாண்டியன், த.வெ.க., வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். நகரில் இருந்து பார்த்தால் ஜோதி தெரியும் படி சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவை சார்பில் 150 கிலோ எடை உள்ள திரி மூலம் 702 லிட்டர் நெய் ஊற்றி அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவை குருநாதர் சுருளிவேல், தலைவர் முருகன், துணைத்தலைவர் குமார், செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் செந்தில்குமார், துணைச் செயலாளர் மணிகண்டன் செய்திருந்தனர்.
* போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு ஜோதி தெரியும்படி அரோகரா கோஷத்துடன் மகா தீபம், சொக்கப் பனை ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் உள்ள சிவனுக்கு தீபம், சொக்கப்பனை ஏற்று விழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
* போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய மேலச்சொக்கநாதர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவாசபுரம் பத்திர காளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.