உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் ரோகிணி தீபம் ஏற்றம்

திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் ரோகிணி தீபம் ஏற்றம்

நடுவீரப்பட்டு: கடலுார் அடுத்த திருமாணிக்குழி அம்புசாஷி உடனுறை வாமனபுரீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது.


கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தன்று, காலையில் கோவில்களிலும், மாலை கோவிலுக்கு பின் உள்ள மலையில் ஏற்றப்படுகிறது. ஆனால், கடலுார் அடுத்த திருமாணிக்குழியில் உள்ள அம்புசாஷி உடனுறை வாமனபுரீஸ்வரர் கோவிலில் தீபத்தின் மறுநாளான ரோகிணி நட்சத்திரத்தன்று மாலை கோவிலுக்கு எதிரில் உள்ள மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. அதன்படி கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று மாலை விநாயகர், அம்புசாஷி உடனுறை வாமனபுரீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோவிலின் உட்பிரகாரத்தில் அம்புசாஷி உடனுறை வாமனபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள கோவிலின் எதிரில் உள்ள மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !