உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஸ்ரீ கோதண்ட ராமசாமி கோவிலில் வேத சம்மேளனம் நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ கோதண்ட ராமசாமி கோவிலில் வேத சம்மேளனம் நிகழ்ச்சி

கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில் மூன்றாம் ஆண்டு வேத சம்மேளனம் நிகழ்ச்சி கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமசாமி கோவிலில் வியாழகிழமை யன்று  துவங்கியது. இந்த நிகழ்வானது வரும் ஞாயிற்றுகிழமை அன்று நிறைவடைகிறது. முதல் நாள் வியாழக்கிழமை அன்று காலை முதல் நிகழ்வாக ஸ்ரீ வேதவியாச பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரிக் வேதம் சாம வேதம் ஆகியவற்றின் வேத பாராயண நிகழ்வு நடைபெற்றது 


இரண்டாம்  நாள் வெள்ளிகிழமையும் இதே நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன காவேரி மகாத்மியம் என்ற தலைப்பில் டாக்டர் சேஷாத்ரி கனபாடிகள் கலந்து கொண்டு பேசினார் வெள்ளிகிழமை மாலை கயா சிரார்த்தம்  என்ற தலைப்பில் ஜனார்த்தனன் கனபாடிகள்  கலந்து கொண்டு பேசுகிறார் சனிக்கிழமை மாலை ரிக் வேத  கா ம்ய ஹோமங்கள் என்று தலைப்பில்  நீலகண்ட சாஸ்திரிகள் பேசுகிறார் நிறைவு நாளான ஞாயிற்றுகிழமை  ஆவஹந்தி ஹோமம் நடைபெறுமகிறது. உலகம் நன்மைக்காக இந்த நிகழ்வு நடைபெறுவதாக அமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது அனைத்து நிகழ்வுகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !