உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் திருவாதிரை திருமஞ்சனம்

காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் திருவாதிரை திருமஞ்சனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், கார்த்திகை மாத திருவாதிரை திருமஞ்சனம் நேற்று நடந்தது.


காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடில் உள்ள அனுஷ்டானகுளம், சாலை கிணறு அருகே, ராமானுஜருக்கு என, தனி கோவில் உள்ளது. இங்கு, கார்த்திகை மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !