உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதையல் யோகம்!

புதையல் யோகம்!

வாழ்வின் நிலையாமையை பஜகோவிந்தம் என்னும் நூலில் விளக்கியவர் ஆதிசங்கரர். நிலையாமை பற்றி சொன்ன அவர், விவேகசூடாமணி என்னும் நூலில், வாழ்வின் மகத்துவத்தைப் போற்றுகிறார்.  ஒருவருக்கு மனிதப்பிறவி கிடைப்பது, மோட்சம் பெற வேண்டும் என்ற எண்ணம் உண்டாவது, ஞானிகளின் துணை கிடைப்பது ஆகிய மூன்றும் தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே இப்பிறவியில் கிடைக்கும், என்று சொல்கிறார். நமக்கு மனிதப்பிறவி வாய்த்துவிட்டது. மற்ற இரண்டும் தெய்வ அருள் இருந்தால் கிடைக்கும். இந்தமூன்றும் வாய்த்து விட்டால், தோண்டாமலே புதையல் கிடைத்தது போலத்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !