மாசி மக விழாவில் பங்கேற்கும் வெளியூர் சுவாமிகளுக்கு வரவேற்பு!
ADDED :4689 days ago
புதுச்சேரி: மாசி மக தீர்த்தவாரியில் கலந்துகொள்ள வெளியூரியில் இருந்து சுவாமிகள் நேற்று புதுச்சேரிக்கு வந்தனர்.புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் இன்று நடக்கும் மாசி மக தீர்த்தவாரியில் கலந்துகொள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மயிலம் சுப்ரமணியசுவாமி, செஞ்சி ரங்கநாதர் சுவாமிகள், திண்டிவனம் அலர்மேல் மங்கா சமேதா சீனிவாசபெருமாள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சுவாமிகள் நேற்று மாலை வந்தனர்.திண்டிவனம் அலர்மேல் மங்கா சமேதா சீனிவாசபெருமாள், சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய இணை யமைச்சர் நாராயணசாமி, புதிய நீதிக் கட்சி தலைவர் பொன்னுரங்கம், மாசிமக கடல் தீர்த்தவாரி கமிட்டியினர் கலந்து கொண்டனர்.