உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்புலாபுரம் வடக்குத்தியம்மன் கோயிலில் 3ம் தேதி மாசிப் பொங்கல் விழா

சுப்புலாபுரம் வடக்குத்தியம்மன் கோயிலில் 3ம் தேதி மாசிப் பொங்கல் விழா

திருவேங்கடம் : சுப்புலாபுரம் வடக்குத்தியம்மன் கோயிலில் மார்ச் 3ம் தேதி மாசிப் பொங்கல் திருவிழா நடக்கிறது. சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் வடக்குத்தியம்மன் கோயிலில் மாசிப்பொங்கல் திருவிழா மார்ச் 3ம் தேதி நடக்கிறது. அன்று மாலை மேளதாளத்துடன் அம்மன் அழைப்பு,ஊர் விளையாடல், இரவு 9 மணியளவில் பெரியூர் முத்துராமலிங்கம் குழுவினரின் வில்லிசை நடக்கிறது. நள்ளிரவில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப்பொடிகளால் அபிஷேகமும் தொடர்ந்து அலங்காரம் நடக்கிறது. பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு தீபாராதனை நடத்துகின்றனர். ஏற்பாடுகளை கோயில் அக்தார்கள் முத்துவீரப்பன், நடராஜன், விழாக்கமிட்டியார் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !