கடம்பாடி அம்மன் கோவிலில் ரூ.2.57 லட்சம் உண்டியல் வசூல்
ADDED :4630 days ago
மாமல்லபுரம் : கடம்பாடி மாரிசின்னம்மன் கோவிலில், உண்டியல்கள் மூலம், 2.57 லட்சம் ரூபாய் கிடைத்துஉள்ளது.இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரத்தில் இயங்கி வரும் நெம்மேலி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை கட்டுப்பாட்டில், கடம்பாடியில் மாரிசின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, ஐந்து உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டன.அறநிலையத் துறை உதவி ஆணையர் மோகன சந்தரம், ஆய்வாளர் கருப்பையா, செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள், உண்டியல் பணத்தை எண்ணினர். 2 லட்சத்து 57 ஆயிரத்து 978 ரூபாய், 62.5 கிராம் தங்கம், 229 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.