உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம்: முயற்சி திருவினையாக்கும் என்பதில் நம்பிக்கையுள்ள விருச்சிகராசி அன்பர்களே!

விருச்சிகம்: முயற்சி திருவினையாக்கும் என்பதில் நம்பிக்கையுள்ள விருச்சிகராசி அன்பர்களே!

சூப்பர் மாதம்: உங்கள் ராசிக்கு இந்த மாதம் நற்பலன் வழங்குகிற கிரகங்களாக புதன், சுக்கிரன், கேது, குரு செயல்படுகின்றனர். ராசிநாதன் செவ்வாய், ஐந்தாம் இடத்தில் அமர்வு பெற்றுள்ளதால் மனதில் தேவையற்ற குழப்பமும், செயல்களில் தடுமாற்றமும் ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புபவரிடம், ஆலோசனை பெற்று செயல் பாடுகளைச் செய்வது நல்லது.பேச்சில் நியாய தர்மம் பின்பற்றுவது உங்கள் நற்பெயரைப் பாதுகாக்கும். தம்பி, தங்கைகள் எதிர்பார்க்கும் உதவியை ஓரளவு செய்வீர்கள். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி வழக்கம் போல் இருக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். தாயின் அன்பால் மனநிம்மதி கிடைக்கும்.பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் உங்களுக்கு உற்சாகம் தரும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை தாராள செலவில் வாங்கித்தருவீர்கள். எதிரிகள் விலகுவர். உடல்நலம் நன்றாக இருக்கும். நண்பர்கள் உங்கள் செயல்திறன் வளர தேவையான உதவி வழங்குவர்.தொழிலதிபர்கள் கடும் உழைப்பால் உற்பத்தி, பணவரவின் அளவை அதிகரிப்பர். வியாபாரிகள் சந்தையில் போட்டிகுறைந்து விற்பனை, பணவரவில் புதிய சாதனை இலக்கை அடைவர். பணியாளர்கள் பொறுப்புடன் பணிபுரிந்து அதிகாரிகளிடம் நன்மதிப்பு, சலுகை பெறுவர்.குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். சீரான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். பணிபுரியும் பெண்கள் றித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றி நிர்வாகிகளின் பாராட்டு, வெகுமதி பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த நிதியுதவி கிடைத்து அபிவிருத்தி பணிகளைச் செய்வர். உற்பத்தி, விற்பனை அதிகரித்து உபரி வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவி கிடைக்க யோகம் உண்டு. விவசாயிகளுக்கு அளவான மகசூலும் கால்நடை வளர்ப்பில் நல்ல லாபமும் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டு படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் நன்மையின் அளவு அதிகரிக்கும்.

உஷார் நாள்: 19.3.13 காலை 11.55 முதல் 21.3.13 இரவு 11.20 வரை
வெற்றி நாள்: ஏப்ரல் 4, 5
நிறம்: சிமென்ட், பச்சை  எண்: 5, 8


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !