இருந்தும் இல்லாமல் இரு என்ற வாக்கியத்திற்குரிய பொருள்!
ADDED :4691 days ago
தாய், தந்தை, சகோதரி, சகோதரன், மனைவி, பிள்ளைகள், தாய், தந்தை என்ற எல்லா உறவுகளும் மனிதனுக்கு இருக்கிறது. இவர்களைக் கவனிப்பது அவனது கடமை. ஆனால், ஒரேயடியாக பாசம் வைத்து விடக்கூடாது என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. தாமரை இலை தண்ணீர் போல உறவுகளுடன் ஒட்டியும், ஒட்டாமலும் வாழ்பவரே இறைவனை அடையும் முயற்சியில் வெற்றியடைய முடியும்.