அண்ணாமலையார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு!
ADDED :4576 days ago
ஊட்டி: ஊட்டி எச்.பி.எப்., அண்ணாமலையார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. ஊட்டி எச்.பி.எப்., பகுதியில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் கடந்த 8ம் தேதி நன்னீராட்டு பெருவிழா நடந்தது. இதனை தொடர்ந்து 12 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நேற்று முன்தினம் நடந்த நிறைவு நாள் விழாவில், அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை எச்.பி.எப்., இந்து ஆன்மிக சங்கத்தினர் மேற்கொண்டனர்.