உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவிலில் திருக்கல்யாணம்!

அழகர்கோவிலில் திருக்கல்யாணம்!

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஸ்ரீதேவி, பூமாதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு சுந்தரராஜ பெருமாள் மங்கள நாண் அணிவித்து திருக்கல்யாணம் நடந்தது.இக்கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 24ல் துவங்கியது. காலையில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருமஞ்சனம் முடிந்து, தீப ஆராõதனை நடந்தன. மாலையில், பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். மார்ச் 25, 26ல் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 10.35 மணிக்கு, மேள, தாளம், வேத மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் "கோவிந்தா கோஷம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !