சிதம்பர ரகசியம் பற்றி தெரிவிப்பீர்களா!
ADDED :4780 days ago
ஒருமுறை நேரில் போய் உற்றுக் கவனித்துப் பாருங்கள் புரியும். நடராஜர் சிலையின் மேல் பகுதியை உற்று நோக்கினால் பரந்து விரிந்த வெளி (ஆகாயம்) தெரியும். இறைவன் எங்கும் பரந்து விரிந்தவனாக உள்ளான். அவன் இல்லாத இடமே இல்லை என்பது தான் இதற்குரிய எளிய விளக்கம். சிவன் கோயில்களில் பாடுபவர்களும், பேசுபவர்களும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி முடிப்பது வழக்கம். அதாவது, உலகிலுள்ள எல்லா சிவாலயங்களும் நடை சாத்தப்பட்டதும், ஒட்டுமொத்த சக்தியும் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரம் கோயிலுக்குள் அடங்கி விடுமாம். அந்தளவுக்கு சக்தி வாய்ந்த கோயில் இது.