உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படி மட்டுமல்ல! மலையும் 18!

படி மட்டுமல்ல! மலையும் 18!

சபரிமலைக்கு ஐயப்பன் சந்நிதிக்குச் செல்ல 18 படிகள் இருக்கின்றன. மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் இரு முடியுடன் இதில் ஏறும் தகுதி பெறுகின்றனர். இவ்விரதம் படி யேறுவதற்கு மட்டுமல்லாமல் மலையேறுவதற்குரிய உடல், மனவலிமையை தருகிறது.  திருப்பதி வெங்கிடாஜலபதி கோயிலுக்குச் செல்ல ஏழு மலை கடக்கிறோம். ஆனால், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 18 மலை கடக்க வேண்டும். இவை, பொன்னம்பலமேடு, கவுடன் மலை, நாகமலை, சுந்தரமலை, சிற்றம்பலமலை, கல்சிமலை, மாதங்கமலை, மயிலாடும் மலை, ஸ்ரீபாதமலை, தேவர்மலை, நிலைக்கல் மலை, தலப்பாரமலை, நீலிமலை, கரிமலை, புதுச்சேரிமலை, காளைகெட்டி, இஞ்சிப் பாறை, சபரிமலை ஆகியனவாகும். இவர் குடியிருக்கும் காட்டுப்பகுதியை பூங்காவனம் என்று குறிப்பிடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !