பிரம்மோற்சவம்: பெரிய பெருமாள் கோவிலில் 2ம் தேதி கொடியேற்றம்
ADDED :4610 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவம், வரும் இரண்டாம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் குறிப்பிடத்தக்கது ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 18 பெருமாள்களில், யதோக்தகாரி பெருமாளை பெரிய பெருமாள் என்று கூறுவர். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரமோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டும் பிரம்மோற்சவம், ஏப், 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று மாலை 6:00 மணிக்கு கடைசி வெள்ளிக்கிழமை உற்சவம் நடைபெறும். நாளை மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ செல்வர் உற்சவம், 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு அங்குரார்ப்பணம் நடைபெறும்.